புதுடெல்லி: சர்வதேச அளவில் செயல்பட்டு வரும் போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் கூண்டோடு பிடிக்க ஏழு மாநிலங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியுள்ளது. கோவா காவல்துறையினர் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலின் பணமோசடி நடவடிக்கைகளை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. கோவா, மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஒடிசா மற்றும் டெல்லி ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 26 இடங்களில் அமலாக்கத்துறை இதுதொடர்பாக அதிரடி சோதனை நடத்தியது. கோவாவில் மட்டும் 12 இடங்களில் நடந்த சோதனையில் ரொக்கப் பணம், போதைப் பொருட்கள், முக்கிய ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
