அரசியலமைப்பு, நீதித்துறை, ஜனநாயகத்தை பாதுகாக்க தலைமை நீதிபதிக்கு மம்தா வேண்டுகோள்

ஜல்பைகுரி: கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் ஜல்பைகுரி சர்க்யூட் பெஞ்சின் புதிய கட்டிட திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் இந்தியாவின் தலைமை நீதிபதி சூர்யாகாந்த் கலந்து கொண்டார். இந்த விழா மேடையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது: நாட்டு மக்களை விசாரணை அமைப்புகள் தவறாக குறிவைப்பதில் இருந்து பாதுகாக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். தயவுசெய்து அரசியலமைப்பு, ஜனநாயகம், நீதித்துறை, வரலாறு மற்றும் புவியியல், அத்துடன் நாட்டின் எல்லைகளையும் பேரழிவிலிருந்து பாதுகாக்க வேண்டும். நீங்கள் (தலைமை நீதிபதி) நமது அரசியலமைப்பின் பாதுகாவலர். நாங்கள் உங்கள் சட்டப்பூர்வ பாதுகாவலரின் கீழ் இருக்கிறோம். நீதித்துறையில் உங்களை விட யாரும் உயர்ந்தவர்கள் அல்ல. இவ்வாறு பேசினார்.

Related Stories: