பாஜவில் சேர்ந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் காங்கிரசுக்கு திரும்பிய ராஜஸ்தான் மாஜி அமைச்சர்

ஜெய்பூர்: பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் தெற்கு ராஜஸ்தானின் முக்கிய பழங்குடியின தலைவராக இருப்பவர் மகேந்திரஜித்சிங் மாளவியா. அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் கேபினட் அமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார். உத்தரபிரதேசம் அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள காங்கிரஸ் மறுப்பு தெரிவித்தது. இதனால் அதிருப்தி அடைந்த மகேந்திரஜித் சிங் மாளவியா, கடந்த 2024 ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி பாஜவில் இணைந்தார். இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மகேந்திரஜித்சிங் மாளவியா மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பி உள்ளார். அவர் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஒப்புதல் அளித்த நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வௌியாகி உள்ளது.

Related Stories: