கரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் 93 மி.மீ மழை

கரூர், ஜன. 12: கரூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 652.20 மிமீ. பனிக்காலமான ஜனவரி, பிப்ரவரியில் 16.8 மிமீட்டரும், கோடை காலமான மார்ச், ஏப்ரல், மே மாதத்தில் 109.5 மிமீட்டரும், தென்மேற்கு பருவமழை காலமான ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்தில் 238.4 மிமீட்டரும், வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மாதங்களில் 287.5 மிமீட்டரும் என ஆண்டு முழுதும் இந்த சீசனில் 652.20 மிமீட்டா மழையை மாவட்டம் பெற்று வருகிறது. இதுதான் கரூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவாக உள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு 723.6 மிமீட்டரும், 2012ம் ஆண்டு 527.9 மிமீட்டரும், 2013ம் ஆண்டு 489.1 மிமீட்டரும், 2014ம் ஆண்டு 567.52 மிமீட்டரும், 2015ம் ஆண்டு 820.52 மிமீட்டரும், 2016ம் ஆண்டு 350.52 மிமீட்டரும், 2017ம் ஆண்டு 740.58 மிமீட்டரும், 2018ம் ஆண்டு 486.67 மிமீட்டரும், 2019ம் ஆண்டு 597.91 மிமீட்டரும், 2020ம் ஆண்டு 751.03 மிமீட்டரும், 2021ம் ஆண்டு 934.56 மிமீட்டரும், 2022ம் ஆண்டு 748.37 மிமீட்டரும், 2023ம் ஆண்டு 557.53 மிமீட்டரும், 2024ம் ஆண்டு 782.60 மிமீட்டரும், 2025ம் ஆண்டு 508,26 மிமீட்டரும் என்ற அடிப்படையில் மழை பெய்திருந்தது.
இதனடிப்படையில், கடந்த 2011ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரை 15 ஆண்டுகளில் கரூர் மாவட்டம் 7 முறை மட்டுமே ஆண்டு சராசரி மழையை பெற்றுள்ளது. 8 முறை சராசரியை விட மிகவும் குறைவான அளவில்தான் கரூர் மாவட்டம் பெற்றுள்ளது.

எனவே, இந்தாண்டாவது கருர் மாவட்டம் அதிகளவு மழையை பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அனைவரும் உள்ளனர். இதனை வலியுறுத்தும் வகையில் 2026ம் ஆண்டின் முதல் நாளன்று அதிகாலையில் லேசான மழை பெய்து புத்தாண்டை வரவேற்றது. இதனைத் தொடர்ந்து 10 நாட்களுக்கு பிறகு காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக டெல்டா மாவட்டங்களில் பரவலாக பெய்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக கரூர் மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

அதனடிப்படையில் நேற்று அதிகாலை 2 மணி முதல் மதியம் வரை மாவட்டம் முழுதும் பரவலாக விட்டு விட்டு மழை பெய்து கொண்டேயிருந்தது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டது. விடாது பெய்து வரும் மழையின் காரணமாக கரூர் மாவட்டத்தின் சீதோஷ்ணநிலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை கரூர் 8.80 மிமீ, அரவக்குறிச்சி 10.40 மிமீ, அணைப்பாளையம் 9 மிமீ, க.பரமத்தி 4 மிமீ, குளித்தலை 9 மிமீ, தோகைமலை 21.40 மிமீ, கிருஷ்ணராயபுரம் 9 மிமீ, மாயனூர் 8 மிமீ, பஞ்சப்பட்டி 6.40 மிமீ, பாலவிடுதி 4 மிமீ, மயிலம்பட்டி 3 மிமீ என மாவட்டம் முழுதும் 93 மிமீ மழை பதிவாகியிருந்தது. மேலும், மதியம் வரை கருர் மாவட்டம் முழுதும் விடாது மழை பெய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories: