வேலாயுதம்பாளையத்தில் கஞ்சா விற்ற 3 இளைஞர்கள் கைது

வேலாயுதம்பாளையம், பிப். 21:கரூர் மாவட்டம் புகளூர் ஹை ஸ்கூல் மேடு அருகே தட்டாங்காடு பகுதியில் கஞ்சா பொட்டங்களை விற்பனை நடைபெற்று வருவதாக, வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  தகவலின் அடிப்படையில் சிறப்பு போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் தட்டங்காடு பகுதியில் ரெய்டு நடத்தினர். போலீசார் நடத்திய சோதனையில் கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்த மூன்று இளைஞர்களை சுற்றி வளைத்து பிடிக்கப்பட்டனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், தோட்டக்குறிச்சி பெரிய கண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கல்யாணசுந்தரம் மகன் மதன்(19), புகளூர் ஹை ஸ்கூல் மேடு கிழக்குத் தெரு பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவரது மகன் சரவணன்(23), கரூர் வேடிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த, தற்போது வேலாயுதம்பாளையம் அருகே ஓகேஆர் தெருவில் குடி இருந்து வரும், ஜெயக்குமார் மகன் சரவணன்(31). என்பது தெரியவந்தது. செய்யப்பட்டது. கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Stories: