பகுதிநேர சுகாதாரவளாகத்தை முழுநேரமாக பராமரிக்கவேண்டும்

கரூர், பிப். 26: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை குறிஞ்சி நகரை ஒட்டி வடக்குத்தெருவில் கடந்த 2014-15ம் ஆண்டில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் ரு. 10லட்சம் மதிப்பில் நவீன சமூதாய கழிப்பிடம் புதுப்பிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த பகுதியினர் தினமும் இநத கழிப்பிடத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இந்த கழிபப்பிடம் குறிப்பிட்ட நேரம் மட்டுமே தினமும் செயல்படுகிறது.

காலை ஆரம்பித்து மதியம் வரை திறக்கப்பட்டு மூடப்படுகிறது. ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் எப்போதும் மூடிய நிலையிலேயே உள்ளது. இதனால், இதனை தினமும் பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை பராமரிக்க ஆட்கள் பற்றாக்குறை இருப்பதாக கூறப்படுகிறது. இப்பகுதிமக்களின் நலன் கருதி இந்த பகுதி நேர சுகாதார வளாகத்தை எப்போதும் பயன்படுத்தும் வகையில் நடைமுறைபடுத்தவேண்டுமென கோரிக்கைவைத்துள்ளனர்.

 

Related Stories: