கிருஷ்ணராயபுரம், பிப். 21: கிருஷ்ணராயபுரத்தில் திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரமாக நின்று கொண்டிருந்தவர்கள் மீது பைக் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் கிழக்கு காலனி பகுதியை சேர்ந்தவர் சவரியப்பன் ராஜு என்பவரின் மகன் அசோக் (35). இதே பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி என்பவரின் மகன் ராஜா(45). இவர்கள் இருவரும், கிருஷ்ணராயபுரம் திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள யூனியன் ஆபீஸ் பகுதியில் சாலையோரம் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது திருச்சி மாவட்டம் சிந்தாமணி அந்தோணி கோயில் தெருவை சேர்ந்த ஜெயராம் கிறிஸ்டோபர்(29) என்பவர் ஓட்டி வந்த பைக் நின்று ெகாண்டிருந்த 2 பேர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பைக் ஓட்டியவர் உட்பட 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு கரூர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து அசோக் கொடுத்த புகாரின் பேரில் மாயனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
