தோகைமலை வாரச்சந்தையில் மாயமான மோட்டார் சைக்கிள்

தோகைமலை, பிப், 19: கரூர் மாவட்டம் நாகனூர் ஊராட்சி கம்பத்தாம்பாறை பழனியப்பன் மகன் தர்மர்(35). இவர் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 30ம் தேதி அன்று தோகைமலை வாரச்சந்தைக்கு தர்மர் தனது மோட்டார் சைக்கிளில் வந்து உள்ளார். பின்னர் தோகைமலை சமுதாயக்கூடம் அருகே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சந்தையில் காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்காக சென்று உள்ளார்.

சந்தையில் பொருட்களை வாங்கிக் கொண்டு மோட்டார் சைக்கிளை எடுப்பதற்காக தர்மர் திரும்பி வந்து உள்ளார். அப்போது அங்கு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் மாயமாகி இருந்து உள்ளதை கண்டு தர்மர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பல்வேறு பகுதிகளில் தேடிபார்த்தும் மாயமான மோட்டார் சைக்கிள் கிடைக்கவில்லை. இது குறித்து தர்மர் தோகைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் மாயமான மோட்டார் சைக்கிளை தேடி வருகின்றனர்.

 

 

Related Stories: