கிருஷ்ணராயபுரம் கிராம வருவாய் உதவியாளர்கள் போராட்டம்

கிருஷ்ணராயபுரம், பிப். 20: கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகத்தில் கிராம வருவாய் உதவியாளர்கள் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம உதவியாளர் சங்கம் சார்பில், வருவாய் கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு வட்டத் தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார். வட்டச் செயலாளர் ரமணிகுமார், வட்ட பொருளாளர் பிரேம்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

 

Related Stories: