மதுபாட்டில் விற்ற 3 பேர் கைது

கடவூர், பிப். 25: திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன் (40). இவர், மாலப்பட்டி ஒயின்சாப் அருகே முள்காட்டில் சட்ட விரோதமாக மதுபானங்களை விற்பனை செய்ததாக தெரிகிறது. இதேபோல் கடவூர் அருகே செம்பியநத்தம் ஊராட்சியை சேர்ந்தவர் ரவி (48). இவர், மம்பத்தையூர் பரிவு ரோடு அருகே சட்ட விரோதமாக மதுபானங்களை விற்பனை செய்துள்ளார்.

மேலும் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சத்திரப்பட்டியை சேர்ந்தவர் அங்கமுத்து (46). இவர், தரகம்பட்டி ஒயின் ஷாப் அருகே மதுபானங்களை விற்பனை செய்து உள்ள்ளார். தகவலறிந்த சிந்தாமணிபட்டி போலீசார்மதுபானங்கள் விற்ற முருகேசன், ரவி, அங்கமுத்து ஆகியோரை கைது செய்து மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

 

Related Stories: