முன்னாள் படைவீரர் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம்

கரூர், பிப். 19: கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்ட முன்னாள் படைவீரர் மற்றும் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 19.02.2026 அன்று வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடத்தப்படவுள்ளது.

அன்றைய தினம் கரூர் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தைச் சார்ந்தோர்கள் கலந்துகொண்டு தங்களது குறைகளை மனுக்களாக நேரில் அளித்து பயன்பெறலாம். மனுக்கள் இரண்டு பிரதிகளில் வழங்க வேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

 

Related Stories: