கோத்தகிரி, ஜன.10: கோத்தகிரி ஒன்றிய திமுக சார்பில் கோத்தகிரி காந்தி மைதானத்தில் திராவிட பொங்கல் விழா ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு அரசு கொறடா ராமசந்திரன் மற்றும் மாவட்ட பொறுப்பாளர் கே.எம்.ராஜூ, தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தில் ரங்கராஜ் பங்கேற்றனர்.
இவ்விழாவில் இந்து, கிறிஸ்துவம், இஸ்லாமிய குருமார்கள் கலந்து கொண்டு சாதி, மதம், இனம் பாகுபாடு இன்றி நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என சிறப்பு பிரார்த்தனைகள் செய்யப்பட்டு பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட அவைத்தலைவர் போஜன், பொதுக்குழு உறுப்பினர் வீரபத்திரன், கோத்தகிரி நகராட்சி தலைவர் ஜெயக்குமாரி, கோத்தகிரி ஒன்றிய செயலாளர்கள் செல்வம், மு.க.கணபதி, ஜான்சிராணி, ஜாஸ்மின், கவுன்சிலர்கள் மற்றும் திமுகவினர், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
