கூடலூர் அருகே சுற்றுலா பயணிகளை கவர தோட்டக்கலை பண்ணையில் புதிய பூங்கா திறக்கப்பட்டது

கூடலூர்: கூடலூரை அடுத்த பொன்னூரில் உள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணையில் குருமிளகு, காப்பி, பாக்கு, தேயிலை, கிராம்பு, பட்டை, ஜாதிக்காய், சர்வசுகந்தி, பட்டர் புரூட், ரம்புட்டான் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் மற்றும் பழ வகைகளின் நாற்றுக்கள் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு மானிய விலையிலும்,நேரடி விற்பனை மூலமாகவும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இங்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் புதிய பூங்கா அமைக்கப்படுள்ளது.இந்த பூங்காவில் டுரான்டா, அசேலியா, ஹைட்ரான்ஜியா, சால்வியா, ஐரிசின், ஆல்டர்நேன்த்ரா, குரோடான்ஸ் போன்ற பல்வேறு வகையான அலங்கார செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. மேலும் நீர் தாவரங்களை வளர்க்கும் வகையில் சிறிய குளம் அமைக்கப்பட்டுள்ளது.

தோட்டக்கலை உதவி இயக்குநர் ஐஸ்வர்யா தலைமையில் நேற்று சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பார்வைக்கு இந்த பூங்கா திறந்து வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பண்ணை மேலாளர் விஜய் ராஜ் மற்றும் பண்ணை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

 

Related Stories: