குருவாயூர் கோயில் திருவிழா : கலை நிகழ்ச்சிகள் கோலாகலம்

பாலக்காடு,மார்ச்3: குருவாயூர் கிருஷ்ணர் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் பல்வேறு நாட்டியங்கள் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று மூலவருக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றன. கோயிலில் திரளாக பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து கோபிகா நாட்டியம், ராதா மாதவம் நாட்டியம் பார்வையாளர்களை கவர்ந்தது.

முன்னதாக இந்நாட்டிய நிகழ்ச்சிகளை தேவஸ்தான சேர்மன் விஜயன் தொடங்கி வைத்தார். நிர்வாகி அருண்குமார், தேவஸ்தான மக்கள் தொடர்புத்துறை அதிகாரி சுரேஷ்குமார், விமல்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தினர். குருவாயூர் திருவிழாவையொட்டி உற்சவமூர்த்தி அலங்கரித்த யானை மீது கோயில் வளாகத்தில் செண்டைவாத்யத்துடன் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
திருவிழாவின் இரண்டாவது நாளான நேற்று உற்சவமூர்த்தி சுற்றுப்பிரகார மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Related Stories: