பந்தலூரில் சாலை பாதுகாப்பு வார விழா பேரணி

பந்தலூர், ஜன.10: நீலகிரி மாவட்டம் பந்தலூர் பஜாரில் தேவாலா காவல் நிலையம் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் துவங்கிய பேரணியில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

சாலை போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்போம், உயிர் பலியை தடுப்போம், தலைக்கவசம் உயிர் கவசம், குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை தவிர்ப்போம், இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என மாணவர்கள் கோஷமிட்டனர்.

பேரணி பஜார் வழியாக புதிய பேருந்து நிலையம் வரை சென்று மீண்டும் பள்ளி வளாகத்தை சென்றடைந்தது. இந்நிகழ்வில் உதவி ஆய்வாலர் லோகேஷ், பள்ளி தலைமை ஆசிரியர் பொறுப்பு செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

 

Related Stories: