அரசு பள்ளி வளாகத்தில் அறிவுசார் மையம் அமைக்க பூமிபூஜை

அரூர், ஜன.10: அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், நகராட்சி சார்பில் மூலதன மானிய நிதி 2025-26ம் ஆண்டு திட்டத்தின் கீழ் ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் அறிவுசார் மையம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. தர்மபுரி எம்பி ஆ.மணி தலைமை வகித்து, பணிகளை துவக்கி வைத்தார். இதில் நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகராட்சி தலைவர் இந்திராணி, துணை தலைவர் சூர்யா தனபால், நகர்மன்ற உறுப்பினர் முல்லைரவி, நகராட்சி பொறியாளர் பிரேமா, குமரேசன், வினோத், மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணகுமார், ஒன்றிய செயலாளர்கள் வேடம்மாள், சந்திரமோகன், சவுந்தரராசு, தென்னரசு, சந்தோஷ்குமார், தமிழழகன், பொறியாளர் சென்னகிருஷ்ணன், பொதிகைவேந்தன், விண்ணரசன், சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: