கூடலூர், ஜன. 8: கூடலூர் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழாவை ஒட்டி இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கூடலூர் நகராட்சி அலுவலகத்தை ஒட்டி துவங்கிய பேரணி புதிய பேருந்து நிலையம் வழியாக கள்ளிக்கோட்டை சாலை வரை சென்று, காந்தி சிலை அருகில் முடிவடைந்தது.
பேரணியில் கூடலூர் காவல் துறை நீலகிரி சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு, மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பேரணியை கூடலூர் டிஎஸ்பி வசந்தகுமார் துவக்கி வைத்தார். இன்ஸ்பெக்டர் ராஜேந்திர குமார் மற்றும் காவல் துறையினர் முன்னிலை வகித்தனர்.
