ஒரசோலை அரசு பள்ளியில் 3ம் பருவ பாடநூல்கள் விநியோகம்

ஊட்டி, ஜன. 8: ஒரசோலை அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மூன்றாம் பருவ பாடநூல்கள் வழங்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள ஒரசோலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அரையாண்டு தேர்வுகள் முடிந்து பள்ளி திறக்கப்ட்ட நிலையில் பள்ளி துவங்கும் நாளில் பாட நூல்கள், நோட்டு புத்தகங்கள் வழங்கிட வேண்டும் என்ற அரசின் ஆணைக்கிணங்க மூன்றாம் பருவ பாடநூல்கள் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்பட்டன. பள்ளி தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் அனைவரையும் வரவேற்றார்.

பள்ளி மேலாண்மை குழு முன்னாள் மாணவர் உறுப்பினர் பொறங்காடு சீமை தலைவர் மற்றும் ஒரசோலை லயன் அறக்கட்டளை நிர்வாக ஆலோசகர் ராமா கவுடர் தலைமை வகித்து பாட நூல்கள் வழங்கினார். நிகழ்வில் அறக்கட்டளை நிர்வாக பொறுப்பாளர்கள் சுரேஷ் நஞ்சன், சத்தியமூர்த்தி, சிவக்குமார் பெள்ளன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். ஒரசோலை லயன் மூலமாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு பசுமை டீ-சர்ட்கள் வழங்கப்பட்டன.

 

Related Stories: