பந்தலூர், ஜன. 7: கேரளா மாநிலம் இஸ்லாம் ஜமாத் அமைப்பு சார்பில் கந்தபுரம் அபூபக்கர் முஸ்லியார் தலைமையில் நேற்று அன்பு பயணம் மேற்கொண்டவர்களுக்கு பந்தலூர் மற்றும் சேரம்பாடி, உப்பட்டி பகுதியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜனவரி 1ம் தேதி முதல் ஜனவரி 16ம் தேதி வரை காசர்கோடு முதல் திருவனந்தபுரம் வரை நடைபெறும் அன்பு பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று பந்தலூர் பகுதியில் நடைபெற்றது. இந்த பயணத்திற்கு பந்தலூர் பகுதியில் பெரிய பள்ளிவாசல் இஸ்லாம் ஜமாத் அமைப்பினர் மற்றும் அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
