தும்மனட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

ஊட்டி, ஜன. 7: தும்மனட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்வு பள்ளியில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் கெளசல்யா, பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் ராமச்சந்திரன், தும்மனட்டி கிராம தலைவர் நடராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பள்ளி முதுகலை ஆசிரியர் செவனன் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் பிரகாஷ் தலைமை வகித்து மாணவர்களுக்கு விலையில்லா மிதி வண்டிகளை வழங்கினார். தும்மனட்டி கிராம செயலாளர் ராஜாமணி, நாக்குபெட்டா நல சங்கத்தலைவர் தருமன் தும்மனட்டி கிராமத்தில் உள்ள 11 ஊர்களின் தலைவர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில், பட்டதாரி ஆசிரியர் பீமன் நன்றி கூறினார்.

 

Related Stories: