பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் காட்ஃபாதராக விளங்கும் தொழிலதிபர் வாரன் பஃபெட் CEO பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்

 

2வாஷிங்டன்: உலக அளவில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் காட்ஃபாதராக விளங்கும் தொழிலதிபர் வாரன் பஃபெட் (95) கடந்த 60 ஆண்டுகளாக தான் வகித்துவந்த Berkshire Hathaway நிறுவன CEO பதவியிலிருந்து நேற்றோடு ஓய்வு பெற்றார். வாரன் பஃபெட்டின் சொத்து மதிப்பு சுமார் ரூ.13 லட்சம் கோடி ஆகும்.

பங்குச் சந்தை பிதாமகன்’ என அழைக்கப்படும் பிரபல தொழிலதிபர் வாரன் பஃபெட், ‘பெர்க்ஷ்யர் ஹாத்வே’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகுகினார். இதற்கான ஓய்வை அவர் அறிவித்துள்ளார். நஷ்டத்தில் இருந்த ‛பெர்க்ஷியர் ஹாத்வே’ நிறுவனத்தை மீட்டு கடந்த 60 ஆண்டு கால வரலாற்றில் புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றவர் தான் வாரன் பஃபெட்.

உலகம் முழுவதும் ஏராளமான தொழிலதிபர்கள் உள்ளனர். ஆனால் சில தொழிலதிபர்கள் மட்டும் தான் நாடுகளை கடந்து புகழ்பெறுவார்கள். அந்த வகையில் ஒருவர் தான் ‛வாரன் பஃபெட்’. இவர் அமெரிக்காவை சேர்ந்தவர். உலகம் முழுவதும் தற்போது செயல்பட்டு வரும் ‛பெர்க்ஷியர் ஹேத்வே’ நிறுவனத்தின் சிஇஓவாக இருக்கிறார்.

அமெரிக்காவை தலைமையிடாக கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் ‛பெர்க்ஷயர் ஹேத்வே’. முதலில் ஜவுளி தொழிலை இந்த நிறுவனம் மேற்கொண்டது. பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டது. இந்த நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக வாரன் பஃபெட் மற்றும் துணை தலைவராக சார்லி மங்கர் ஆகியோர் பொறுப்பேற்றனர்.

பெர்க்ஷியர் ஹேத்வே நிறுவனத்தின் பங்குகளை 1962ம் ஆண்டில் வாங்கினார். ஒரு பங்கை 7.60 டாலர் என்ற மதிப்பீட்டில் வாங்கினார். அப்போது ஜவுளி விற்பனையில் ஈடுபட்டு நஷ்டத்தை எதிர்கொண்ட நிலையில் மெல்ல மெல்ல மீள தொடங்கியது. அதன்பிறகு காப்பீடு, ரெயில் ரோடு, எனர்ஜி, வாடிக்கையாளர்களுக்கு தேவையான பிற பிராண்டுகள் என்று தொடர்ந்து முதலீடுகளை அதிகரித்தது.

இன்று, பெர்க்ஷயர் நிறுவனத்தின் பங்குகள் 750,000 டாலருக்கும் அதிகமான விலையில் வர்த்தகம் செய்யப்படுகின்றன. இந்த வெற்றிக்கு வாரன் பஃபெட் தான் முக்கிய காரணமாகும். குறிப்பாக பங்கு சந்தை முதலீட்டில் கொடி கட்டி பறக்க தொடங்கியது. ‛பங்கு சந்தையின் பிதாமகன்’ என்ற புனைப்பெயரை வாரன் பஃபெட் பெற்றார்.

தற்போது இந்த நிறுவனத்தின் மொத்தம் மதிப்பு 900 பில்லியன் அமெரிக்க டாலர் என கூறப்படுகிறது. உலகளவில் முக்கிய நிறுவனமாக இது செயல்பட்டு வருகிறது. கடந்த 60 ஆண்டு வரலாற்றில் வாரன் பஃபெட் இன்றி நாளை முதல் இந்த நிறுவனம் இயங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் தற்போது அவர் ‛பெர்க்ஷியர் ஹேத்வே’ நிறுவனத்தின் சிஇஓ பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். நேற்று தான் அவரது கடைசி நாளாகும். வாரன் பஃபெட்டுக்கு தற்பாது 96 வயது ஆகிறது. வயது முதிர்வு காரணமாக அவர் ஓய்வை அறிவித்துள்ளார்.

 

Related Stories: