ஏழைகளின் ஆப்பிள் இமாச்சல் பேரிக்காய் ரூ.200க்கு விற்பனை

ஊட்டி, டிச. 31: ஊட்டியில் இமாச்சல் பேரிக்காய் அதிக அளவு விற்பனை செய்யப்படுகிறது. இதனை சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இமாச்சல் பேரிக்காய் என்பது இமாச்சலப் பிரதேசத்தில் விளையும் ஒரு வகை பழமாகும், இது ஆப்பிள், பிளம்ஸ் போன்ற பழங்களுடன் அங்கு பிரபலமானது.

இந்த மாநிலம் பேரிக்காய் உற்பத்தியில் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. இங்குள்ள விவசாயிகள் பல்வேறு வகையான பேரிக்காய் வகைகளை பயிரிடுகின்றனர், மேலும் இது இமாச்சலின் தோட்டக்கலை உற்பத்தியில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பேரிக்காய்கள் கால்சியம், இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்தது, இவை “ஏழைகளின் ஆப்பிள்” என்றும் அழைக்கப்படுகின்றன. தற்போது இந்த பழங்கள் அதிகளவு நீலகிரி மாவட்டத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.

கடைகள் மட்டும் என்று சாலையோர கடைகளிலும் அதிக அளவு இந்த பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது. கிலோ ஒன்று ரூ.200 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனை பார்ப்பதற்கு ஆப்பிள் போன்ற காட்சியளிப்பதால் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் இந்த பழத்தை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். மேலும் இந்த பழம் ஆப்பிள் போன்ற சுவை உள்ளதால் அனைவரையும் கவர்ந்து வருகிறது.

 

Related Stories: