ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மதுரை, டிச. 31: மதுரை தெற்குவாசலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்டிடியு தொழிற் சங்கத்தின் தெற்கு மாவட்ட தலைவர் சர்தார் உசேன் தலைமை தாங்கினார். செயலாளர் ஜாகீர் உசேன் வரவேற்றார். வடக்கு மாவட்ட செயலாளர் பகுர்தீன் சாதிக், மாநில செயற்குழு உறுப்பினர்கள் சத்தியமூர்த்தி, அபுதாஹிர், ராமநாதபுரம் மண்டல தலைவர் சிக்கந்தர் முன்னிலை வகித்தனர்.

வடக்கு மாவட்ட தலைவர் மன்சூர் துவக்க உரை நிகழ்த்தினார். எஸ்டிடியு மாநில நிர்வாகிகள் அப்துல் சிக்கந்தர், முகம்மது பாரூக், எஸ்டிபிஐ தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர், வடக்கு மாவட்ட செயலாளர் சீனி சிக்கந்தர் நிர்வாகிகள் அஜ்மீர், சுல்தான் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

44 தொழிலாளர் சட்டங்களை நீக்கி, புதிய நான்கு தொகுப்பு சட்டங்களை அமல்படுத்திய ஒன்றிய அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். தமிழ்நாட்டில் பைக் டாக்சிகளை தடை செய்யவும் கோரிக்கை வைத்தனர். எஸ்டிடியு வடக்கு மாவட்ட துணைத் தலைவர் நிஸ்தார் நன்றி கூறினார்.

 

Related Stories: