புத்தாண்டு முதல் 65 எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம் அதிகரிப்பு: 10 முதல் 85 நிமிடங்கள் வரை பயண நேரம் குறையும்

சென்னை: ஜனவரி 1ம் தேதி முதல் 65 எக்ஸ்பிரஸ் ரயில்களின் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் 10 முதல் 85 நிமிடங்கள் வரை பயண நேரம் குறையும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இந்திய ரயில்வேயில் புதிய ரயில் நேர அட்டவணை நாளை முதல் அமல்படுத்தப்படுகிறது. இதனால் பயணிகள் இனி வேகமாகவும் வசதியாகவும் பயணம் செய்ய முடியும் என கூறப்படுகிறது. பல ரயில்கள் 10 முதல் 85 நிமிடங்கள் முன்பாகவே சென்றடையும் வகையில் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனால் தினமும் பயணம் செய்பவர்களுக்கும், நீண்ட தூர பயணம் செய்பவர்களுக்கும் இது மிகப்பெரிய உதவியாக இருக்கும்.

இந்த புதிய அட்டவணையில் பல மாற்றங்கள் உள்ளன. அதன்படி நாளை முதல் 65 மெயில், எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட் ஆகிய ரயில்கள் 5, 25, 85 நிமிடங்கள் மாற்றப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வேயில் பெரிய அளவில் பாதை விரிவாக்கம், இரட்டை பாதை அமைப்பு, சிக்னல் மேம்பாடு, மின்மயமாக்கல் போன்ற பணிகள் நடந்துள்ளன. சுமார் 34,428 கிலோமீட்டர் புதிய பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் ரயில்கள் வேகமாக ஓட முடியும். பழைய நேர அட்டவணையில் சில இடங்களில் தாமதம் ஏற்பட்டது. இப்போது புதிய வேகத்துக்கு ஏற்ப நேரங்களை சரி செய்துள்ளனர்.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்னை சென்ட்ரல்-நாகர்கோவில் இடையே இயக்கப்படும் ரயில் எண் (12689) இரவு 7 மணிக்கு புறப்படும் ரயில் நாளை முதல் 20 நிமிடம் முன்கூட்டியே காலை 10.20 மணிக்கும், சென்ட்ரல்- திருப்பதி சப்தகிரி எக்ஸ்பிரஸ் (16053) 15 நிமிடம் காலதாமதாக மதியம் 2.40 மணிக்கு புறப்பட்டு மாலை 5.50 மணிக்கும், சென்னை சென்ட்ரல்- டெல்லி கிராண்ட் டிரங்ஸ் எக்ஸ்பிரஸ் (12615) 5 நிமிடம் தாமதமாக மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.10 மணிக்கும், சென்ட்ரல்-போடிநாயக்கனூர் சூப்பர்பாஸ்ட் (20601) இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு 5 நிமிடம் முன்பாக காலை 8.50 மணிக்கும், சென்னை சென்ட்ரல்-திருப்பதி சப்தகிரி எக்ஸ்பிரஸ் (16057) 5 நிமிடம் தாமதமாக காலை 6.30 மணிக்கு புறப்பட்டு காலை 9.50 மணிக்கு சென்றடையும்.

நிஜாமுதீன்- சென்னை சென்ட்ரல் ராஜஸ்தானி எக்ஸ்பிரஸ் (12434) பிற்பகல் 3.35 மணிக்கு புறப்பட்டு 10 நிமிடம் முன்பாக இரவு 8.50 மணிக்கும், நிஜாமுதீன்- சென்னை சென்ட்ரல் துரந்தோ எக்ஸ்பிரஸ் (12270) வழக்கம் போல் பிற்பகல் 3.55 மணிக்கு புறப்பட்டு 10 நிமிடம் முன்பாக இரவு 8.50 மணிக்கு சென்றடையும். மேலும் கோவை-சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (12680) வழக்கம் போல் காலை 6.20 மணிக்கு புறப்பட்டு 5 நிமிடம் முன்பாகவே மதியம் 1.45 மணிக்கும், போடிநாயக்கனூர்- சென்னை சென்ட்ரல் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (20602) 5 நிமிடம் தாமதமாக இரவு 8.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.55 மணிக்கும், திருப்பதி- சென்னை சென்ட்ரல் சப்தகிரி எக்ஸ்பிரஸ் (16054) வழக்கம் போல் காலை 10.10 மணிக்கு புறப்பட்டு 5 நிமிடம் முன்கூட்டியே மதியம் 1.30 மணிக்கு வந்தடையும்.

அதைபோன்று சென்னை எழும்பூர்-குருவாயூர் எக்ஸ்பிரஸ் (16127) 20 நிமிடம் தாமதமாக காலை 10.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.40 மணிக்கும், எழும்பூர்- ராமேஸ்வரம் சேது எக்ஸ்பிரஸ் (22661) 10 நிமிடம் தாமதமாக மாலை 5.55 மணிக்கு புறப்பட்டு அதிகாலை காலை 4 மணிக்கும், சென்னை எழும்பூர்-செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் (12661) இரவு 7.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.40 மணிக்கும், எழும்பூர்-மங்களூரு எக்ஸ்பிரஸ் (16159) 25 நிமிடம் தாமதமாக இரவு 11.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 7.15 மணிக்கு சென்றடையும்.

தூத்துக்குடி- சென்னை எழும்பூர் பேரல்சிட்டி எக்ஸ்பிரஸ் (12694) இரவு 9.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.35 மணிக்கும், செங்கோட்டை- சென்னை எழும்பூர் பொதிகை எக்ஸ்பிரஸ் (12662) 5 நிமிடம் தாமதமாக மாலை 6.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் 15 நிமிடம் முன்பாகவே காலை 5.55 மணிக்கும், ராமேஸ்வரம்- சென்னை எழும்பூர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (22662) இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.20 மணிக்கும், திருச்செந்தூர்- சென்னை எழும்பூர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (20606) 10 நிமிடம் தாமதமாக புறப்பட்டு இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு வழக்கம் போல் மறுநாள் காலை 10.25 மணிக்கு வந்தடையும்.

அதைப்போன்று தாம்பரம்-மதுரை மஹால் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (22623) வழக்கம் போல் இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு 10 நிமிடம் முன்பாகவே காலை 7.55 மணிக்கும், தாம்பரம்- நாகர்கோவில் அந்தோதியா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (20691) வழக்கம் போல் இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு 5 நிமிடம் முன்பாக மறுநாள் மதியம் 12.30 மணிக்கும், கொல்லம்- தாம்பரம் எக்ஸ்பிரஸ் (16102) வழக்கம் போல் மாலை 4 மணிக்கு புறப்பட்டு 1 மணி நேரம் 25 நிமிடம் (85 நிமிடம்) முன்பாக காலை 6.05 மணிக்கும், நாகர்கோவில்-தாம்பரம் அந்தோதியா (20692) வழக்கம் போல் பிற்பகல் 3.50 மணிக்கு புறப்பட்டு 45 நிமிடம் முன்பாக காலை 5.05 மணிக்கு வந்தடையும்.

Related Stories: