தஞ்சாவூர், டிச.24: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா, மக்கள் சந்திப்பு நிதி திரட்டும் இயக்கம்அம்மாபேட்டையில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியை முன்னாள் எம்எல்ஏ பத்மாவதி துவக்கி வைத்தார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார், இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாவட்டத் தலைவர் தாமரைச்செல்வி, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் உள்ளிட்ட முன்னணி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
