ஜெயங்கொண்டத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை

ஜெயங்கொண்டம், ஜன.21: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கீழத் தெருவை சேர்ந்தவர் சண்முகம், கூலி தொழிலாளி. இவருக்கும் இந்திரா(30) என்பவருக்கும் திருமணம் ஆகி 4 வயதில் மைதிலி என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இந்திரா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. அருகில் உள்ளவர்கள் சத்தம் கேட்டு அவரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அப்போது செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது தாயார் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். திருமணமாகி 5 வருடங்கள் ஆன நிலையில் வரதட்சனை கொடுமையா என உடையார்பாளையம் ஆர்டிஓ தனி விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories:

>