இந்தியாவில் பாஜகவின் பிடியில் உள்ள அரசு அமைப்புகளை மீட்க போராடி வருகிறோம்: ராகுல் காந்தி பேச்சு

டெல்லி: இந்தியாவில் பாஜகவின் பிடியில் உள்ள அரசு அமைப்புகளை மீட்க போராடி வருவதாக, எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அண்மையில் ஜெர்மனி சென்ற அவர், பெர்லினில் உள்ள ஹெர்டி பள்ளியில் ஆற்றிய உரையை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் பாஜகவின் ஒற்றை தலைமைக்கு எதிராக அனைத்து மாநிலங்களில் குரல்களை உள்ளடக்கி அரசியலை காங்கிரஸ் முன்னெடுக்கிறது என தெரிவித்தார். இந்தியாவில் சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற ஜனநாயக அமைப்புகள் மத்திய அரசால் ஆயுதமாகப் பயன்பட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

தேர்தலை பொறுத்தவரை தெலுங்கானா, ஹிமாசல பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றது என கூறிய ராகுல் காந்தி. ஹரியானா, மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை என்றும் குற்றம் சாட்டினார். பாஜகவுடன் மட்டுமல்ல அக்கட்சியின் பிடியில் உள்ள அரசு அமைப்புகளை மீட்கவே போராடி வருவதாகவும் ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார்.

Related Stories: