அரவக்குறிச்சி அரசு பள்ளியில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரவக்குறிச்சி, டிச.20: அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.பள்ளி தலைமை ஆசிரியர் சாகுல் அமீது தலைமை வகித்தார்.இதில் மாணவர்களிடையே தேர்தல் தொடர்பான முக்கிய தகவலகள். இதில், இன்று இந்திய தேர்தல் ஆணையத்தால் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு, அதில் தங்களின் பெற்றோர்களின் பெயர், இடம் பெற்றுள்ளதா? என்பதை மாணவர்கள் அவசியம் சரிபார்ப்பதன் அவசியம், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் படிவம் – 6 மூலம் பெயரை சேர்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.மேலும், இந்த தகவலை பெற்றோர்கள் மட்டுமின்றி, தங்களின் தெருவில் உள்ள உறவினர்கள் மற்றும் பொதுமக்களிடமும் எடுத்துச் சொல்லி தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என மாணவர்களை ஊக்குவித்தார். வாக்காளர் அடையாள அட்டை இருப்பது மட்டும் போதாது; வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றிருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும் என்பதை விளக்கமாக எடுத்துரைத்தார். நிகழ்ச்சியின் இறுதியில், ‘சரி பார்ப்பீர்! சரி பார்ப்பீர்! வாக்காளர் பட்டியலைச் சரி பார்ப்பீர்!
சேர்ப்பீர்! சேர்ப்பீர்! 18 வயது முடிந்தவரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பீர்! வாக்குரிமை! நமது குடியுரிமை!’என்ற முழக்கங்களுடன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: