பெங்களூர் நிறுவனத்துடன் கலைஞர் கருணாநிதி கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை, ஜன. 19: கோவை கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லூரிக்கும், பெங்களூரில் உள்ள சென்டர் ஆப் எக்ஸ்லன்ஸ் பார் அட்வான்ஸ்டு கம்ப்யூட்டிங், அப்கோமார்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று நடந்தது. இந்த ஒப்பந்தம் கல்லூரி வளாகத்தில், கல்லூரி துணைத்தலைவர் இந்து முருகேசன் மற்றும் பெங்களூர் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ் பார் அட்வான்ஸ்டு கம்ப்யூட்டிங் நிறுவன இயக்குனர் கார்த்திக் கே.வைத்தியநாதன் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது. அப்போது, கார்த்தி கே.வைத்தியநாதன் கூறுகையில், “ஐஓடி, தெர்மோடைனமிக்ஸ் போன்ற பல்வேறு துறைகளில் உள்ள சிக்கலை தீர்க்க கணித அறிவு முக்கியத்துவம் பெறுகிறது” என்றார். மேலும், மெஷின் ேலர்னிங், செயற்கை நுண்ணறிவு, வி.எல்.எஸ்.ஐ. வடிவமைப்பு போன்றவை குறித்தும் எடுத்துரைத்தார்.  கல்லூரி முதல்வர் மோகன்தாஸ் காந்தி, துணை முதல்வர் ரமேஷ், கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் துறையின் முனைவர் சாந்தி, அனைத்து துறைத்தலைவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: