கார் மோதி வாலிபர் பரிதாப பலி

சிங்கம்புணரி, டிச.15:திருப்பத்தூர் அருகே உள்ள காரையூர் பகுதியை சேர்ந்தவர் சத்யமூர்த்தி(29). இவர், உறவினரின் குழந்தையை பார்ப்பதற்கு டூவீலரில் சிங்கம்புணரிக்கு வந்துள்ளார். பின்னர் சொந்த ஊருக்கு திரும்பும் பொழுது எஸ்வி மங்கலம் அருகே முன்னால் சென்ற காரை சத்தியமூர்த்தி முந்த முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிரே குன்றக்குடியில் இருந்து பிரான்மலை நோக்கி ஞானசேகரன்(35) ஓட்டி வந்த கார் சத்தியமூர்த்தி டூவீலர் மீது மோதியது.

இதில் சத்தியமூர்த்தி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அப்போது அவ்வழியாக சென்ற மணி என்பவரது டூவீலர் மீதும் இருசக்கர வாகனம் மோதியதில் மணி படுகாயம் அடைந்து சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து எஸ்.வி.மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Stories: