ஒன்றிய அரசின் கல்வி உதவித்தொகை என்எம்எம்எஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை: ஒன்றிய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகைத் திட்டத்தின் (என்எம்எம்எஸ்) கீழ் அரசு, அரசு உதவி பள்ளிகளில் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கான தேர்வின் மூலம் தமிழகத்தில் 6,695 பேர் உள்பட நாடு முழுவதும் ஒரு லட்சம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும். என்எம்எம்எஸ் தேர்வு ஜனவரி 10ம் தேதி நடத்தப்பட உள்ளது. 8ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இணையதள விண்ணப்பப் பதிவு நேற்று தொடங்கியது. தேர்வுத் துறை இணையதளத்தில் (dge.tn.gov.in) இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதன்பின்னர் பூர்த்தி செய்த படிவங்களை தேர்வுக் கட்டணம் ரூ.50ஐ சேர்த்து தாங்கள் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் வரும் 20ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதுகுறித்த கூடுதல் விவரங்களை அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களை தொடர்பு கொண்டு மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

Related Stories: