நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: ரஜினிகாந்த் – வயதை வென்ற வசீகரம். மேடையில் ஏறினால் அனைவரையும் மகிழ்விக்கும் சொல்வன்மை. உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத கள்ளம் கபடமற்ற நெஞ்சம். ஆறிலிருந்து அறுபதுவரைக்கும் அரைநூற்றாண்டாகக் கவர்ந்திழுக்கும் என் நண்பர் ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த்துக்கு உளம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள். மென்மேலும் பல வெற்றி படைப்புகளை அளித்து, மக்களின் அன்போடும் ஆதரவோடும் தங்கள் வெற்றிக்கொடி தொடர்ந்து பறக்கட்டும். mஇவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: