திண்டுக்கல்லைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் ராஜசேகர் திருச்சி எடமலைப்புதூர் அருகே போலீசாரால் சுட்டுப் பிடிப்பு..!!

திருச்சி: திண்டுக்கல்லைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் ராஜசேகர்(31) திருச்சி எடமலைப்புதூர் அருகே போலீசாரால் சுட்டுப் பிடிக்கப்பட்டார். ராமச்சந்திரா நகரில் உள்ள வீட்டில் பதுங்கி இருந்த ராஜசேகரை சுற்றிவளைத்தபோது போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றார். உதவி ஆய்வாளர் பாஸ்கரை கத்தியால் தாக்கிவிட்டு தப்ப முயன்ற ராஜசேகரை பாதுகாப்புக்காக போலீசார் சுட்டு பிடித்தனர். கோவை போத்தனூர் காவல் நிலைய குற்ற வழக்கில் தொடர்புடைய பிரபல கொள்ளையன் ராஜசேகர் திருச்சியில் சுட்டு பிடிப்பு. காயம் அடைந்த எஸ்.ஐ. பாஸ்கர், சுட்டுப் பிடிக்கப்பட்ட ராஜசேகர் ஆகியோர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: