டி-20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி வெற்றி ஆழ்கடலில் நீச்சல் பயிற்சி குழுவினர் கொண்டாட்டம்

துரைப்பாக்கம்: நீலாங்கரை கடல் பகுதியில் இந்திய கிரிக்கெட் அணி டி-20 உலக கோப்பை வென்றதை அடுத்து ஆழ்கடலில் நீச்சல் பயிற்சி குழுவினர் கொண்டாடினர். டி-20 உலக கோப்பையின் இறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் ஆனது. இதன் மூலம், மூன்றாவது முறையாக டி20 உலக கோப்பையை வென்ற முதல் நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற்றுள்ளது. 2007 மற்றும் 2024ல் வென்ற பிறகு, இந்தியா இப்போது 2026ல் டி-20 உலக கோப்பையை வென்றுள்ளது. நியூசிலாந்து வெற்றி பெற இந்தியா 256 ரன்கள் இலக்காக நிர்ணயித்திருந்தது, ஆனால் நியூசிலாந்து 19 ஓவர்களில் 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்த வெற்றியின் மூலம், இந்தியா நியூசிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து தொடர்ச்சியாக இரண்டாவது டி20 உலகக் கோப்பையை வென்றது. இதை கொண்டாடும் வகையில் சென்னை நீலாங்கரை கடல் பகுதியில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர் அரவிந்த் மற்றும் அவரது குழுவினர் ஆழ்கடலில் சுமார் 50 அடி ஆழத்தில் கிரிக்கெட் விளையாடியும் தேசிய கொடியை ஏந்தியும் மகிழ்ச்சியையும் பாராட்டையும் தெரிவித்தனர்.

Related Stories: