நந்திகேஸ்வரருக்கு காய்கள் அலங்காரம் விவசாயிகள் கோரிக்கை பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் முன்களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி

பெரம்பலூர், ஜன 17: பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், முன்கள பணியாளர்களுக்கு முதற்கட்ட கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தினை கலெக்டர் வெங்கட பிரியா பெரம்பலூர் எம்எல்ஏ தமிழ்ச்செல்வன் முன்னிலையில்; நேற்று துவக்கி வைத்தார். இது குறித்து கலெக்டர் தெரிவித்துள்ளதாவது: நாட்டின் முதலாவது கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்டத்தை தமிழக முதல்வர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தடுப்பூசி போடும் பணியினை துவக்கி வைத்து பார்வையிட்டார். தமிழகத்தில் 166 இடங்களில் கொரோனாதடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு இதற்காக 1500 -க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மற்றும் சுகாதாரத்துறையினர்கள் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதனைத்தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் காணொளி வழியில் நடத்தப்பட்ட வழிகாட்டுதலின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட அரசு தலைமை அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்திற்கு முதற்கட்டமாக 5,100 தடுப்பூசிகள் வரப்பெற்றுள்ளன.

தடுப்பூசி போடுவதன் முக்கிய நோக்கம் ‘கொரோனா இல்லாத தமிழகம்” என்ற சூழலை உருவாக்கி மக்கள் அனைவரும் நோயற்ற வாழ்வு வாழ வழிவகுக்கும். மேலும், தடுப்பூசி செலுத்துவதற்கு போதுமான காற்றோட்ட இடவசதி, இணைய இணைப்பு, மின்சாரம் பாதுகாப்பு, போன்றவற்றிற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யபட்டுள்ளது.இந்த தடுப்பூசி செலுத்துபவர் முக்கிய பங்கு வகிப்பதால் அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த தடுப்பூசி திட்ட பணி ஒத்திகைக்கு தேவையான மருத்துவ பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களின் விவரங்கள் கோவின் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பயனாளிகள் தடுப்பூசியினை எங்கே எந்த இடத்தில் பெற வேண்டும் என்ற விவரங்கள் அவர்களின் கைப்பேசிக்கு  கோவின் செயலியின் மூலம் குறுந்தகவல் சென்றடையும். மேலும், அவர்கள் தடுப்பூசி பெற்றபின் தடுப்பூசி பெற்ற விவரங்கள் அடங்கிய சான்றிதழ்கள் கோவின்  செயலியின் மூலம் பெறுவர். இதனை தொடர்ந்து நான்கு கட்டமாக தடுப்பூசி பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக அனைத்து மருத்துவ மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கும், இரண்டாம் கட்டமாக கொரோனா தடுப்பு பணியில் முன்னிலையில் பணிபுரியும் பணியாளர்களுக்கும், மூன்றாம் கட்டமாக 60 வயதிற்கு மேற்பட்ட அனைத்து மக்கள் மற்றும் நீண்டகால நோயினால் பாதிக்கப்பட்ட நபர்களும் மற்றும் நான்காம் கட்டமாக அனைத்து மக்களுக்கு தடுப்பூசி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. எனவே சுகாதார துறையினர் மற்றும் அரசு அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.நிகழ்ச்சியில் துணை இயக்குநர்(சுகாதார பணிகள்) கீதாராணி, இருக்கை மருத்துவர் ராஜா, கண்காணிப்பாளர் தர்மராஜ், மாவட்ட மலேரியா அலுவலர் சுப்ரமணியம் அரசு மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அரியலூர்: அரியலூர் மாவட்டம், கடுகூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதாரப்பணியாளா;களுக்கு கோவிட்-19 தடுப்பூசி வழங்கும் பணியினை  அரசு  தலைமைக்கொறடா தாமரை ராஜேந்திரன்  கலெக்டர் ரத்னா தலைமையில் பார்வையிட்டார். ஜெயங்கொண்டம் எம்எல்ஏ ராமஜெயலிங்கம்  முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில்,அரசு தலைமைக்கொறடா  தெரிவித்ததாவது,முதற்கட்டமாக கோவிட்-19 தடுப்பூசி சிறப்பு முகாம் அரியலூர் அரசு தலைமை மருத்துவமனை, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை, குமிழியம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கடுகூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது.அரியலூர் மாவட்டத்தை  கொரோனா பெருந்தொற்று இல்லாத மாவட்டமாக மாற்ற அனைவரும் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றார். இதில் எஸ்பி சீனிவாசன், மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவா் சந்திரசேகா்  மாவட்ட வருவாய் அலுவலா் ஜெய்னுலாப்தீன் உள்ளிட்ட அலுவலா–்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: