குன்னம் அருகே அகரம்சீகூரில் நடந்த கபடி போட்டியில் வென்ற அணிக்கு பரிசு வழங்கல்

குன்னம்,மார்ச் 2: குன்னம் அருகே அகரம்சீகூரில் நடந்த கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசு வழங்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் கிழக்கு அம்பேத்கார் திடலில் ஏஎஸ்ஆர் கபடி குழு நடத்திய டாக்டர் பீமாராவ் அம்பேத்கர் மன்றத்தின் 32வது ஆண்டு கபடி போட்டி நடைபெற்றது. போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சா.சி சிவசங்கர் முதல் பரிசை வழங்கினார். போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு குன்னம் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக அரசின் போக்குவரத்து (ம) மின்சாரத்துறை அமைச்சருமான சிவசங்கர் சார்பில் முதல் பரிசாக ரூ.45,000 ரொக்கமாகவும், ரூ.5,000 மதிப்பில் கேடயமும் வழங்கப்பட்டது.

பரிசினை அகரம்சீகூர் திராவிட முன்னேற்ற கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் பலர் முன்னிலையில் வழங்கி வீரர்களை பாராட்டினர். நிகழ்ச்சியில் மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் தியாகி தேவராஜ், கௌதமன், ஆசிரியர் காமராஜ், வரதராஜ், ராமசாமி, தனபால், ஜெயச்சந்திரன் மற்றும் ஒன்றிய இளைஞர் அணி துணை செயலாளர் நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

Related Stories: