பாடாலூர், பிப்.21: பெரம்பலூர் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் ரமேஷ் (38). இவர் கடந்த 2023-ஆம் ஆண்டு பாடாலூர் போலீசாரால் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கு விசாரணைக்கு ரமேஷ் பலமுறை ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். இதனால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து போலீசார் ரமேஷை தேடி வந்தனர். இந்நிலையில் பாடாலூர் சப்-இன்ஸ்பெக்டர் கொளஞ்சியப்பன் தலைமையிலான குழுவினர் ரமேஷை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
