பெரம்பலூர், பிப். 25: பெரம்பலூர் அருகே கிராவல் மண் திருட்டில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.பெரம்பலூர் அருகே உள்ள கவுல்பாளையம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் மனோஜ் என்கிற மனோபாலன்(29). இவர் டிப்பர் வைத்து கொண்டு இரவு நேரங்களில் அனுமதியின்றி கிராவல் மண் திருடி வந்தது தெரியவந்தது. இது குறித்த தகவலின் பேரில் பெரம்பலூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது கிராவல் மண் திருடிய மனோபாலனை கையும் களவுமாக பிடித்தனர்.
அப்போது போலீசாரிடமிருந்து மனோபாலன் தப்பி தலை மறைவானார். இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிந்து மனோ பாலனை தேடிவந்தனர். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அனிதா உத்தரவின்பேரில் பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான தனிப்படை போலீசார், தலைமறைவாக இருந்த மனோபாலனை நேற்று கைது செய்து, பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
