ஊதிய உயர்வு வழங்கிட கோரி மின்வாரிய பொறியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர்,மார்ச் 4: மின்வாரிய பொறியாளர்கள், அலுவலர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிட பெரம்பலூர் மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தமிழ்நாடு மின்வாரிய தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு மின்வாரியத்தில் பணிபுரியும் பொறியாளர்களுக்கும், அலுவலர்களுக்கும் கடந்த 2023 டிசம்பர் 1ஆம் தேதியில் இருந்து ஊதிய உயர்வு வழங்கிட வலியுறுத்தி மாநிலம் தழுவிய 4வது நாள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரம்பலூரில் நான்கு ரோடு அருகே உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று காலை 10.45 மணிக்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மின்வாரிய தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் மாநிலச் செயலாளர் அகஸ்டின் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டு நடவடிக்கை குழுவின் மாவட்ட, வட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் என 25 பெண்கள் உள்பட மொத்தம் 70 பேர்கள் கலந்து கொண்டனர்.

 

Related Stories: