குன்னம்,மார்ச் 4: குன்னம் அருகே அத்தியூர் கிராமத்தில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது. இதில் 300 பேர் பயனடைந்தனர். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அத்தியூர் கிராமத்தில் அருண் மருத்துவமனை மற்றும் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் டாக்டர் கொளஞ்சிநாதன் முன்னிலையில் நடைபெற்றது. அத்தியூர் கிராமத்தை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். பொது மருத்துவ முகாமில் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, இசிஜி பரிசோதனை செய்யப்பட்டன.
முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும் காய்ச்சல், இருமல், சளியால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அனைவருக்கும் இலவச மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன. இதேபோல் அத்தியூர் கிராமத்தை சுற்றியுள்ள அத்தியூர் குடிக்காடு புதுப்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்டோர் இலவச மருத்துவ முகாமில் பயனடைந்தனர்.
