”மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது’’செங்கோட்டையன் முன் தவெகவில் இணைந்தவர் திருநங்கையுடன் ஆட்டம்: வீடியோ வைரல்

 

கோபி: செங்கோட்டையன் முன்னிலையில் தவெகவில் இணைந்தவர் திருநங்கையுடன் ஆடும் ஆட்டம் வீடியோ வைரலாகி வருகிறது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு திடீரென விஜய் முன்னிலையில் இணைந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனுக்கு தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர், கொங்கு மண்டல பொதுச்செயலாளர் என இரண்டு பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதைத்தொடர்ந்து, கோபியில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில், தினமும் தவெக தொண்டர்கள் வருகை, அதிமுகவில் இருந்து விலகும் நபர்கள் செங்கோட்டையன் முன்னிலையில் இணையும் நிகழ்வு என அலுவலகமே களை கட்டி வருகிறது. இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு செங்கோட்டையன் முன்னிலையில் தவெகவில் இணைந்த கோபியை சேர்ந்த சுமார் 55 வயது நபருக்கு செங்கோட்டையன் பொன்னாடை போர்த்துவது போன்ற புகைப்படம் வெளியானது. சிறிது நேரத்திலேயே அந்த நபர், திருநங்கையை மடியில் அமர்த்திக்கொண்டு, எங்கேடி போனே இவ்வளவு நாளா? என கேள்வி கேட்பது, பாடல் பாடுவது தொடர்பான வீடியோ வெளியானது.

அதில், “மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது… மனசுக்குள்ள பஞ்சவர்ணம் கிளி பறக்குது…’’ என்கிற பாடல் பாடுவதும், அதைத்தொடர்ந்து திருநங்கை அந்த நபருக்கு முத்தம் கொடுக்க, அதற்கு, என்னடி இந்த மாதிரி கிஸ் பண்றே? எங்கே போனே மாமாவ விட்டுட்டு..? இந்த மாமாவ பார்க்காம அங்க எந்த மாமாவ பார்க்க போனே…?’’ என அந்த நபர் கேட்பதும் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த பதிவுக்கு பின் வந்த கமெண்ட் ஒன்றில், வீடியோவில் இருப்பது திருச்சியை சேர்ந்த யூ டியூபர் எனவும் தெரிவித்து உள்ளனர். செங்கோட்டையன் உடன் இருப்பவர் அந்த நபர்தான்… எனக்கூறி நெட்டிசன்கள் வறுத்து எடுப்பது வைரலாகி வருகிறது.

 

Related Stories: