தாராபுரம் அருகே கோழி பண்ணை அதிபரிடம் ரூ.90 ஆயிரம் பறிமுதல்

தாராபுரம், ஏப். 2: தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தாராபுரம் பூளவாடி சாலையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்தவரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.90 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கபட்டது. தொடர்ந்து, அவரிடம் நடத்திய விசாரணையில் திம்மநாயக்கன் பாளையத்தை சேர்ந்த யுவராஜ் (34), இவர் அப்பகுதியில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். தனது பண்ணையில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு மருந்து வாங்குவதற்கு பணம் கொண்டு வந்தது தெரியவந்தது. பின்னர் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் தேர்தல் பறக்கும் படை அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

 

Related Stories: