தொண்டாமுத்தூர், ஏப்.2: கோவை வடவள்ளி பகுதி பொம்மணம்பாளையத்தில் அமைந்துள்ள தி அத்யாயனா இண்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில் குழந்தைகளுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக டாக்டர் சந்திரசேகர் கலந்து கொண்டு ப்ரீகேஜி, எல்கேஜி, யூகேஜி 2025-2026 ம் கல்வி ஆண்டில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார்.
முன்னதாக பெற்றோர் முன்னிலையில் குழந்தை வளர்ப்பின் வழிமுறைகள் குறித்து பேசினார். விழா தொடக்கத்தில் பள்ளி இயக்குநர் ஆனந்த் கிருஷ்ணன் மற்றும் துணை இயக்குநர் சௌமியா, பள்ளி தாளாளர் சிவகாம சுந்தரி ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவை துவங்கி வைத்து, வாழ்த்தி பேசினர். இந்நிகழ்வில் பெற்றோர்கள், குழந்தைகள், ஆசிரியர்கள் திரளாக பங்கேற்றனர்.
