மின்வாரியத்தில் சாப்ட்வேர் மேம்படுத்தும் பணியால் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு

ஈரோடு, ஏப். 2: ஈரோடு மின் வாரியத்தில் சாப்ட்வேர் மேம்படுத்தும் பணியால், 2 நாள் மின் கட்டணம் செலுத்த இயலாது என அறிவிக்க பட்டுள்ளது. தமிழ்நாடு மின்பகிர்மான கழகம், நுகர்வோர் சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் புதிதாக மேம்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இதனால், ஈரோடு மண்டலத்தில் உள்ள அலுவலக, இணையவழி மின் கட்டணம் செலுத்துதல் மற்றும் புதிய மின்சார இணைப்பு விண்ணப்ப சேவைகள் வருகிற 4ம் தேதி (சனிக்கிழமை) காலை 6 மணி முதல் 5ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை இயங்காது.

4ம் தேதி மின் கட்டண கடைசி தேதியாக உள்ள நுகர்வோர்களின் வசதிக்காக, அவர்களுக்கு கால அவகாசம் மேலும் ஒரு நாள், அதாவது 6ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த இடையூறுகளை பொறுத்துக்கொண்டு, நுகர்வோர் அதற்கேற்ப திட்டமிட்டு கொள்ளுமாறு மின்வாரிய அதிகாரிகள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Related Stories: