அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு இலவச சைக்கிள்

 

வேதாரண்யம், டிச.7: நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாநில விவசாயிகள் ஆலோசனைக்குழு உறுப்பினரும், ஒன்றிய திமுக செயலாளருமான மகாகுமார் தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் வடுகநாதன் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் அச்சகம் அன்பு, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் அலமேலு, பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மைகுழு உறுப்பினர்கள், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன், மாவட்ட பிரதிநிதி மச்சழகன், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் வீரக்குமார், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் பிரகாஷ், வார்டு கவுன்சிலர் அப்துல்அஜீஸ், ஒன்றிய தகவல் தொழில்நுட்பணி ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: