நாகை அரசு கல்லூரி வளாகத்தில் பேராசிரியைகள் மெகா தூய்மைப்பணி

 

நாகப்பட்டினம், டிச.7: நாகப்பட்டினம் அரசு கல்லூரியில் மெகா தூய்மைபணியையொட்டி 1 டன் மர கழிவுகளை பெண் பேராசிரியர்கள் அகற்றினர். நாகப்பட்டினம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மகளிர் குழுமம் சார்பில் மெகா தூய்மை பணி நடந்தது. கல்லூரி முதல்வர் பேராசிரியர் அஜிதா தலைமை வகித்தார். மாதாந்திர மெகா தூய்மை பணியில் பேராசிரியைகள் மற்றும் மாணவிகள், பெண் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு கல்லூரி வளாகத்தை தூய்மைப்படுத்தினர். இந்தத் தூய்மை பணியில் கல்லூரி வளாகத்தில் இருந்த ஒரு டன் அளவிற்கான மரக்கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டன.

Related Stories: