தஞ்சை பெரியகோயிலில் நடிகை ஸ்ருஷ்டி, நடிகர் துரை.சுதாகர் சாமி தரிசனம்

 

தஞ்சாவூர், டிச.6: நடிகை ஸ்ருஷ்டி, நடிகர் துரை.சுதாகர் நேற்று தஞ்சை பெரிய கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். தர்மதுரை, கத்துக்குட்டி, டார்லிங் உள்பட பல படங்களில் நடித்து உள்ள நடிகை ஸ்ருஷ்டி மற்றும் நடிகர் துரை.சுதாகர் கார்த்திகை தீபதிருநாளை முன்னிட்டு தஞ்சை பெரியக் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். அப்போது, பெருவுடையார், வராகி அம்மன், பெரியநாயகி, நந்திய பகவான் உள்ளிட்ட தெய்வங்களை வழிப்பட்டனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. நடிகை ஸ்ருஷ்டி தர்மதுரை, கத்துக்குட்டி, டார்லிங் உள்பட 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Stories: