சிவகாசி, டிச. 6: சிவகாசி மாநகர் திருத்தங்கல்லில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
இதில் அம்மா பேரவை துணை செயலாளர் அன்பு செல்வம், மாவட்ட பொருளாளர் செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் வெள்ளைச்சாமி, சிவகாசி கிழக்கு பகுதி செயலாளர் கார்த்திக், சிவகாசி மேற்கு பகுதி செயலாளர் ராஜா, மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர் விக்னேஸ்வரன், மாவட்ட மாணவர் அணி துணை செயலாளர் அஜித்குமார், இளைஞர் பாசறை துணை தலைவர் தங்கம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை திருத்தங்கல் ஒருங்கிணைந்த பகுதி கழக செயலாளரும், சிவகாசி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான சி.எம்.ராஜா செய்திருந்தார்.
