துறையூர், டிச. 6: துறையூர் அரசு பெண்கள் மேல்நிலை ப்பள்ளி மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிளை எம்எல்ஏ ஸ்டாலின் குமார் வழங்கினார். திருச்சி மாவட்டம் துறையூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா தலைமை வகித்தார். விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் தலைமை வைத்தார். பள்ளியில் பயிலும் 252 மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிளை எம்எல்ஏ ஸ்டாலின்குமார் வழங்கினார். நிகழ்ச்சியில் துறையூர் நகர செயலாளர் மெடிக்கல் முரளி, நகர்மன்ற உறுப்பினர்கள் வீரமணிகண்டன், சுதாகர், கார்த்திகேயன், அம்மன் பாபு, இளையராஜா, பாஸ்கர் மற்றும் கட்சி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவிகள், கலந்து கொண்டனர்.
