வையம்பட்டி அருகே கிராவல் மண் கடத்திய 3 பேர் கைது

 

மணப்பாறை, டிச.6: மணப்பாறை அடுத்த வையம்பட்டி காவல் சரகத்தில் அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்பி செல்வநாகரத்தினம் உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் மாலை சேதனையில் ஈடுபட்டனர். அப்போது ராக்கம்பட்டி பகுதியில் அரசு அனுமதியின்றி சிலர் கிராவல் மண் எடுத்துக் கொண்டிருந்தனர்.

அவர்களை சுற்றி வளைத்த தனிப்படை போலீசார், 2 டிராக்டர்கள் மற்றும் ஒரு ஜேசிபி இயந்திரத்தை பறிமுதல் செய்து, ஓட்டுனர்கள் கரூர் மாவட்டம் சேர்வைக்காரன்பட்டியை சேர்ந்த ஆணைக்குட்டி மகன் ஜோதிராஜ்(35), வையம்பட்டி ஒன்றியம் ராக்கம்பட்டியை சேர்ந்த நல்லுச்சாமி மகன் அன்பழகன்(42), வெள்ளாளப்பட்டியை சேர்ந்த பச்சையப்பன் மகன் செல்வராஜ்(54) ஆகியோரை பிடித்து வையம்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்துள்ள வையம்பட்டி போலீசார் 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: